×

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை, டிச.23: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தியும் என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 2வது நிலையின் 2வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, 2வது நிலையின் 1வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரே நேரத்தில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்பு காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு 630 மெகாவாட் மட்டுமே உற்பத்தி நடைபெறுகிறது.

Tags : North Chennai ,Thermal Power Plant ,Chennai ,North Chennai Thermal Power ,Plant ,Athipattu, Tiruvallur district ,
× RELATED சுற்றுலா சென்ற போது வாலிபர் திடீர் மரணம்