×

சிறுமியின் பலாத்கார வீடியோ வைரல்: உத்தரபிரதேசத்தில் கொடூரம்

மொராதாபாத்: உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் அடுத்த பக்காரா காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 15 வயது மகள் காதல் வலையில் சிக்கியிருப்பதாக மாவட்ட எஸ்பி-யிடம் புகார் அளித்தார். அதில், எங்களது கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன், என் மகளிடம் திருமண ஆசைவார்த்தை கூறில அவளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், தனது செல்போனில் ஆபாச வீடியோவையும் பதிவு செய்துள்ளான். இதுகுறித்து என்மகள் கேட்ட போது, ஆபாச வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தி உள்ளான். நடந்த சம்பவத்தை எனது மகள் என்னிடம் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட இளைஞனின் உறவினர்களிடம் புகார் கூறிய போது, அவர்கள் ஆபாச வீடியோவை வைரல் செய்வதாக அச்சுறுத்தினர். பின்னர், அவர்களுடன் பேசுவதை நிறுத்தியவுடன், அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துவிட்டான். அது, இப்போது வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக பாக்ப்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக போலீஸ் எஸ்.பி பிரபாகர் சவுத்ரி, பாக்பரா காவல் நிலைய போலீசாரை தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவர்கள், அந்த இளைஞனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்….

The post சிறுமியின் பலாத்கார வீடியோ வைரல்: உத்தரபிரதேசத்தில் கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Moradabad ,Bakara ,
× RELATED உத்தரப்பிரதேசம் அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தோல்வி