×

விஜய் மல்லையாவின் ரூ.5,600 கோடி சொத்துக்களை வங்கிகள் எடுத்து கொள்ள அனுமதி!: பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

டெல்லி: கடன் மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பியோடிய விஜய் மல்லையாவின் 5,600 கோடி ரூபாய் சொத்துக்களை வங்கிகள் எடுத்துக்கொள்ளலாம் என பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா வெளிநாடு தப்பி சென்றார். அவருக்கு எதிராக எஸ்.பி.ஐ. உள்ளிட்ட வங்கிகள் கடந்த 2009ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. 
இந்த நீதிமன்றம் கடந்த வாரத்தில் பிறப்பித்த இருவேறு உத்தரவுகளில் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5,600 கோடி ரூபாய் சொத்துக்களை வங்கிகளிடம் வழங்கலாம் என தெரிவித்துள்ளது. பெங்களுருவில் உள்ள 564 கோடி ரூபாய் மதிப்பிலான கிங் பிஸ்ஸர் டவர், 713 கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி கட்டிடம் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றோடு வங்கி முதலீடுகள் மற்றும் பங்குகளையும் எடுத்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.   

The post விஜய் மல்லையாவின் ரூ.5,600 கோடி சொத்துக்களை வங்கிகள் எடுத்து கொள்ள அனுமதி!: பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Vijay Mallya ,Delhi ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...