தேவகோட்டையில் காய்கறி லாரி கவிழ்ந்து விபத்து

தேவகோட்டை: நாய் குறுக்கே பாய்ந்ததால் தேவகோட்டையில் காய்கறி ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருச்சியில் இருந்து காய்கறி ஏற்றி கொண்டு தொண்டிக்கு மினி லாரி சென்றது. தேவகோட்டை புறவழிச்சாலையில் உதையாச்சி என்ற இடத்தில் சென்ற போது திடீரென நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் டிரைவர் பிரேக் அடித்தார். இதில் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காய்கறிகள் அனைத்தும் சிதறின. யாருக்கும் பாதிப்பு இல்லை. விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: