சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பிப்ரவரி மாதம் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின்பேரில், முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி 2 நாட்கள் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் எதிர்தரப்பு வக்கீல்கள் நேற்று குறுக்கு விசாரணை செய்தனர். அப்போது, நீதிமன்றத்தின் கதவுகள், ஜன்னல்கள் அடைக்கப்பட்டு சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை 3ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: