×

ஈக்வடாரில் பயங்கரம்: சிறையில் மோதல் 24 கைதிகள் பலி

குவைட்டோ: ஈக்வடார் நாட்டில் உள்ள குவாயகுய்ல் பிராந்தியத்தில் சிறைச்சாலை அமைந்துள்ளது. கொலை, கொள்ளை உள்பட் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் பல்வேறு குழுக்களாக உள்ளனர். அவ்வப்போது அவர்களிடையே மோதல்கள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினமும் 2 கோஷ்டிகளை சேர்ந்த கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை வெடித்தது. கைதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கத்தியால் தாக்கி கொண்டனர். வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால் சிறைச்சாலை போர்களமாக காட்சியளித்தது. இந்த மோதலில் 24 கைதிகள் பலியாகினர். 48 பேர் காயமடைந்தனர். 5 மணி நேர போராட்டத்திற்கு பின்,   சிறைச்சாலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Tags : Ecuador , Terror in Ecuador: Prison clash kills 24 inmates
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!