×

ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியினை செலுத்தும் முகாம் துவக்கம்

கோவை: கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை மற்றும் டாக்டர். ரெட்டிஸ் லெபாரேட்டரீஸ் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இனைந்து ரஷ்ய நாட்டின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியினை செலுத்துவதற்கான கோவிட்-19 தடுப்பூசி முகாமினை துவக்கி உள்ளது.  இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று ஜி.கே.என்.எம். மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், தடுப்பூசிகளை குளிர்சாதன வசதியுடன் பாதுகாத்தல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு ஓர் முன்னோட்டமாக இந்நிகழ்ச்சி அமைந்தது.

இதைத்தொடர்ந்து  வருகிற ஜூன் 28ம் தேதி முதல் பொதுமக்கள் www.cowin.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 0422-2240570, 9994409106 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இந்நிகழ்வில், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி மற்றும் டாக்டர். ரெட்டிஸ் லெபாரேட்டரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : MS , Initiation of Sputnik-V Vaccine Camp at GKNM Hospital
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்