×

ரூர்கேலாவிலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படும் காரணத்தால் அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இந்நிலையில்  நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியிலிருந்து  80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நான்கு கொள்கலன்களில் சென்னை துறைமுகத்திற்கு  கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து லாரிகள் மூலம் மதுரை அரசு  ராஜாஜி மருத்துவமனைக்கு 15 மெட்ரிக் டன் ஆக்சிஜன், வேலூர் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு  தலா 10 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது.  மேலும், மணலியில் உள்ள ஐ நாக்ஸ் கம்பெனிக்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நேற்று காலை லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. 


Tags : Rourkela , 80 metric tons of oxygen came from Rourkela
× RELATED கடனை திருப்பி செலுத்த முடியாததால்...