×

மின்தடையை கண்டித்து சாலை மறியல்

சென்னை, மே 15: எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின் தடை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றும் வெகு நேரமாக மின் தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கத்திவாக்கம் மேம்பாலத்தின் அருகே எண்ணூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  அயனாவரம் புதுநகர், சி.கே தெரு, மேட்டு தெரு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தெருக்களில் கடந்த ஒரு வாரமாக மின் அடிக்கடி தடை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மின்வாரியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மாலை அயனாவரம் புது நகர் 3வது தெரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

The post மின்தடையை கண்டித்து சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Annai Sivagami Nagar ,Ennore ,Kathivakkam ,Dinakaran ,
× RELATED எண்ணூரில் மதுபோதையில் காவலரை தாக்கிய...