புதுடெல்லி: ‘கொரோனா மரணங்களிலிருந்து நம் கவனத்தை திசை திருப்ப முயல்கிறது மத்திய அரசு’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், ‘ஒரு பக்கம் தடுப்பூசிகள் குறைந்துகொண்டுள்ளன. மறுபக்கம் கொரோனாவால் மரணங்கள் அதிகரித்துள்ளன. இந்த இருதரப்பு உண்மைகளை மறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்காகவே பல கூச்சல்களையும், குழப்பங்களையும் பரப்பி நம் கவனத்தை திசை திருப்பி வருகிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். பிரதமரின் பெயரையும், இந்தியாவின் பெயரையும் கெடுக்க காங்கிரஸ் கட்சி சர்வதேச பத்திரிகைகளுடன் சேர்ந்த ‘டூல்கிட்’ ஒன்றை உருவாக்கி உள்ளதாக பாஜ குற்றம்சாட்டியிருந்த நிலையில், ராகுல் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட 1,621 ஆசிரியர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் கொரோனாவால் உயிரிழந்தது குறித்து அம்மாநில அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில், ‘‘தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். கொரோனாவுக்கு ஆளான பிறகு அவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்திருக்க வேண்டும். இந்த இரண்டு கடமைகளிலும் அரசு தவறியுள்ளது. உயிரிழந்தவர்கள் சடலமும் உரிய மரியாதையுடன் ஒப்படைக்கப்படவில்லை. ஆனால், எந்த உணர்வும் அற்ற உபி அரசு 3 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர் என்றும் கூறியுள்ளது’ என்றார்….
The post ராகுல் குற்றச்சாட்டு: பலி எண்ணிக்கை மறைக்கிறது அரசு appeared first on Dinakaran.
