புதுடெல்லி: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பதிவில்,‘‘இந்த மகிழ்ச்சியான புத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்படக்கூடியவர்களின் உரிமைகளான வேலை செய்வதற்கான உரிமை, வாக்களிக்கும் உரிமை மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்கு இந்த ஆண்டை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம்.
நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு, விவசாயிகளுக்கு செழிப்பு, விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு கண்ணியம் மற்றும் அனைவருக்கும் ஒரு சிறந்த வாழ்க்கை தரம் இவை நமது பகிரப்பட்ட தீர்மானங்களாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு உங்களுக்க மிகுந்த மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியை தரட்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
