×

காங். மூத்த தலைவர் வோரா மரணம்

புதுடெல்லி: ம.பி. முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான மோதிலால் வோரா(93) நேற்று காலமானார். அண்மையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அவர், நுரையீரல் தொற்று, சிறுநீரகப் பிரச்னை காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வோரா, 2002 முதல் 2018 வரை 16 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பொருளாராக இருந்துள்ளார். மேலும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Vora ,Death , Cong. Death of senior leader Vora
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்