×

நஞ்சநாடு-இத்தலார் சாலையில் விபத்து அபாயம் நீடிப்பு

ஊட்டி: ஊட்டி - இத்தலார் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வந்தது. இதனால், பெரும்பாலான சாலைகளில் லேசான மண் சரிவு, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஊட்டியில் இருந்து இத்தலார் செல்லும் சாலையோரம் பல இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல், நஞ்சநாடு-இத்தலார் இடையே சாலையோரத்தில் ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. தற்போது அந்த பள்ளத்தில் செடிகள் வைத்து அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இது பகல் நேரங்களில் தெரியும்.

ஆனால், இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதனால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இச்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், இச்சாலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : road ,Nanjanadu-Italar , Road, accident
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி