×

செய்யூர் அருகே தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி முகாம்: சைலேந்திரபாபு பங்கேற்பு

செய்யூர்,: செய்யூர் அருகே நடந்த இயற்கை பேரிடர் கால மீட்பு பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு பங்கேற்று வீரர்களை ஊக்குவித்தார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் வடமண்டலம் மற்றும் வடமேற்கு மண்டல தீயணைப்பு வீரர்கள் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்துள்ள முதலியார் குப்பத்தில் வட கிழக்கு பருவ மழையினால் ஏற்படும் புயல், மழை, எதிர்நோக்கும் பொருட்டு பல்வேறு மீட்பு  பயிற்சி முகாம் நடந்தது.

தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திர பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில், தண்ணீரில் மூழ்கியவர்களை ஸ்குபா டிரைவர்ஸ் மூலம் மீட்கும் பயிற்சி, டிரை லேண்டு மீட்பு பயிற்சி, லைஃப் சேவிங் ஸ்ரோக் பயிற்சி, ரெஸ்க்யூ டியூப் மூலம் மீட்கும் பயிற்சி, ரெஸ்கியூ போர்டு மூலம் மீட்கும் பயிற்சி, ஸ்டேண்ட் அப் பெடலிங் மூலம் மீட்கும் பயிற்சி, கயாகிங் பயிற்சி, இன்ஃப்லா டேபிள் ரப்பர் படகு மூலம் மீட்கும் பயிற்சி மற்றும் படகு தண்ணீரில் மூழ்கி விட்டால் அதை திரும்பவும் சரி செய்தல் உள்ளிட்ட பயிற்சிகளை பயிற்சி வீரர்கள் மிக தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்திய  இயக்குநர் சைலேந்திர பாபு எந்த வித மீட்பு பணியையும் தொழில் நுட்ப அறிவின் உதவிகொண்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும் என எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் மற்றும் வட மேற்கு மண்டல துணை இயக்குநர் சத்திய நாராயணன், மாவட்ட அலுவலர் க.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : firefighters ,Training camp ,Seiyur ,Silenthrababu , Seiyur, Firefighter, Training Camp, Silenthrababu Participation
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்