×

நேபாள எப்எம் சில்மிஷம்

பிதோரகர்: உத்தரகாண்டில் உள்ள லிபுலேக், லும்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் தனது நாட்டின் ஒருபகுதியாக புதிய வரைபடம் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனால் இந்தியா-நேபாள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் எப்எம் ரேடியோக்கள் கூட இந்தியாவை எதிர்க்க ஆரம்பித்துள்ளன. நேபாள பாடல்களுக்கு நடுவே, இந்தியாவுக்கு எதிரான பேச்சுகளை அவை பரப்பி வருகின்றன. இது குறித்து நேபாளத்தை ஒட்டிய எல்லையோர கிராமமக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த தேச விரோத நடவடிக்கை குறித்து எந்த உளவுத்தகவலும் வரவில்லை என பிதோரகர் போலீசார் கூறி உள்ளனர்.

Tags : Nepal FM
× RELATED ஆந்திரா வயலில் பெண் கூலி தொழிலாளிக்கு...