×

திருவிக நகர் மண்டலத்தில் 62 பேருக்கு கொரோனா தொற்று

பெரம்பூர்: சென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையை சேர்ந்த 43 வயது பால் வியாபாரி, ராஜா தோட்டத்தை சேர்ந்த 43 வயது தலைமை காவலர், முத்துக்குமாரசாமி சாலையை சேர்ந்த 2 பேர், திருவிக நகர் தங்கவேல் தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், தீட்டி தோட்டம் 7வது தெருவில் பிரசவித்த தாய், பெரம்பூர் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்கள் 2 பேர், ராஜாஜி தெரு, கக்கன்ஜி காலனி ஆகிய பகுதிகளில் இருவர், அயனாவரம் மதுரை தெருவில் 3 பேர், வீராபுரம் பகுதியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரியும் 36 வயது நபர், அதேபகுதியில் நிறைமாத கர்ப்பிணி ஆகியோருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

 பேசின்பிரிட்ஜ் பகுதியில் 2 பேர், ஓட்டேரியில் 10 பேர், புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் நிறைமாத கர்ப்பிணி, திருவேங்கடசாமி தெரு, போல் நாயக்கர் தெரு, திருவிக நகர், தாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு திருவிக நகர் மண்டலத்தில் ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவொற்றியூர்:  திருவொற்றியூர் விம்கோ நகரில் தனியார் டயர் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணிபுரியும் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் மதியம் மற்றும் இரவு நேர ஷிப்ட்களை ரத்து செய்துள்ளது. மேலும் கிருமி நாசினி தெளித்து தொழிற்சாலையை தூய்மை செய்துள்ளனர்.

தாம்பரம்: மேற்கு தாம்பரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் 45 வயது உதவி ஆய்வாளர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கிண்டி ஐஐடியில் தனிமைப்படுத்தப்பட்டார். இதேபோல், மேற்கு தாம்பரம், கிருஷ்ணா நகரில் 39 வயது பெண், 30 வயது ஆண், கிழக்கு தாம்பரம், திருவள்ளுவர்புரரில் 13 வயது சிறுவன், தாம்பரம் அருள் நகரில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர், அவரது மனைவி, குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரில் 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த இளம்பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Tiruvika Nagar , Thiruvika Nagar Zone, Corona, Curfew
× RELATED வடசென்னையில் அதிநவீனமாகும் 6 பஸ்...