×

ஈரோடு மகளிர் கோர்ட் தீர்ப்பு இரு மகள்களை பலாத்காரம் தந்தைக்கு 20 ஆண்டு சிறை

ஈரோடு:பெருந்துறை அருகே இரு மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம் எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 48 வயது நிரம்பிய கட்டிட தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். பின்னர் அவர் 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 மற்றும் 8 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி அந்த இரு மகள்களையும் குருநாதன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2வது மனைவி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருநாதனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக கட்டிட தொழிலாளிக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.  பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Erode Women's Court ,daughters , Erode Women, Court verdict,raping ,daughters
× RELATED விஷக்கிழங்கு சாப்பிட்ட தொழிலாளி சாவு