×

ராஜஸ்தானில் காணாமல் போன 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை..: போலீசார் விசாரணை

டோங்க்: ராஜஸ்தானில் காணாமல் போன 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிக்கு சென்ற சிறுமி, வகுப்பு முடிந்து மாலை 3 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வராததால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். இந்நிலையில், நேற்று பள்ளிக்கு அரை கி.மீ தொலைவில் உள்ள அடர்ந்த புதர்களுக்கு இடையே மாயமான சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

சிறுமியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று, கற்பழித்து கொலை செய்தது தெரிய வந்தது. சிறுமியின் கழுத்தில் அவர் சீருடையில் அணிந்திருந்த பெல்ட்டால் இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், சிறுமியின் உடல் இருந்த பகுதியில் மது பாட்டில்கள், தின்பண்டங்கள் மற்றும் ரத்த கறைகளும் இருந்தன. பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடல், பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கற்பழிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் யார்-யார்? எத்தனை பேர்? என்பது இதுவரை தெரியவில்லை. சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். மேலும், இதுதொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது, என்று கூறியுள்ளனர்.


Tags : Rajasthan ,Tonk , Rajasthan, 6 year old girl, rape, murder
× RELATED ராஜஸ்தான் வெப்ப அலை: 3 நாட்களில் 22 பேர் பலி