×

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில்  அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. முன்னதாக, சி.பி.ஐ. வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Enforcement Department ,Court ,Chidambaram UNX ,Chidambaram , INX Media, Enforcement Department, P. Chidambaram, Delhi High Court
× RELATED கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்து...