×

அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமைச்சர் வேலுமணி மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உள்ளாட்சி அமைப்புகள் பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாடியது. தனக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் ஒதுக்கி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்தது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், அறப்போர் இயக்கத்திற்கு தடைக் கோரியும், ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டும் வழக்கு எஸ்.பி. வேலுமணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல ஒப்பந்த நிறுவனங்களும் வழக்குகளை தொடர்ந்திருந்தன. இந்த வழக்கு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூற அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி, அமைச்சர் வேலுமணி மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : SB Vellumani , Charitable movement, Minister SB Vellumani, Disclosure, Chennai High Court
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும்...