×

பத்மநாபசுவாமி கோயில் நிகழ்ச்சி பிரதமர் மோடி இன்று திருவனந்தபுரம் வருகை

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக இன்று (15ம் தேதி) கேரளா வருகிறார்.பிரதமர் மோடி கடந்த இரு வாரங்களுக்கு முன் பத்தனம்திட்டாவில் பா.ஜ பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று  (15ம் தேதி) அவர் கேரளா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 4 மணியளவில் அவர் ராய்ப்பூரில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராய் விஜயன் உள்பட பலர் வரவேற்கின்றனர். பின்னர்  3 பேரும் ஹெலிகாப்டரில் கொல்லம் செல்கின்றனர்.

மாலை 5.20 மணியளவில் கொல்லத்தில் ₹350 கோடி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள ெகால்லம் புறவழிச்சாலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 6 மணியளவில் கொல்லம் பீரங்கி மைதானத்தில் நடக்கும் பா.ஜ  மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வரும் அவர் 7.15 மணியளவில் பத்மநாபசுவாமி கோயிலுக்கு செல்கிறார். அங்கு ₹78 கோடியில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளை  தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர் விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் வருகையையொட்டி கொல்லம், திருவனந்தபுரத்தில் பலத்த ேபாலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Padmanabhaswamy Temple , Padmanabhaswamy temple, Prime Minister Modi , Thiruvananthapuram
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி