×

தடை செய்யுங்கள், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் இவிஎம்முக்கு எதிராக திருமண அழைப்பிதழ் மூலம் விநோத எதிர்ப்பு

லத்தூர்: மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் திருமண அழைப்பிதழ் மூலம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரின் சாகுல் தெஹ்சில் அஜன்சோன்டாலில் வசித்து வருபவர் தீபக் காம்ப்ளே. இவர் அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூக பணியாளர்களுக்கான அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இவருக்கு வரும் ஜூன் 8ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தீபக் காம்ப்ளே தன் திருமண அழைப்பிதழில், “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தடை செய்யுங்கள், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்” என்ற வாசகங்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் ஆகியோரின் புகைப்படங்கள், அவர்களின் கருத்துகளையும் திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளார். இதுகுறித்து தீபக் காம்ப்ளே, “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக தற்போதைய மக்களவை தேர்தலுக்கு முன் அதற்கான போராட்டம் வலுப்பெற்றது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுகள் குறித்து திருமணத்துக்கு வரும் உறவினர்கள், நண்பர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே அழைப்பிதழில் இவ்வாறு அச்சிட்டுள்ளேன்” என்று கூறினார்.

 

The post தடை செய்யுங்கள், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் இவிஎம்முக்கு எதிராக திருமண அழைப்பிதழ் மூலம் விநோத எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Latur ,Maharashtra ,Deepak Kamble ,Chakul Tehsil Ajansondal ,Latur, Maharashtra ,India ,EVM ,
× RELATED மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில்...