×

ரூ.80,455 கோடி மதிப்பிலான 10.46 லட்சம் வாகன விபத்து காப்பீடு கிளைம்கள் நிலுவை: ஆர்டிஐ மனுவில் தகவல்

நொய்டா: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.சி. ஜெயின் தாக்கல் செய்த ஆர்டிஐ மனு குறித்து இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) அளித்த பதிலில், ‘2018-19, 2019-20, 2020-21, 2021-22, மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளின் முடிவில் நிலுவையில் உள்ள வாகன விபத்து காப்பீடு கிளைம்களின் எண்ணிக்கை முறையே, 9,09,166; 9,39,160; 10,08,332; 10,39,323 மற்றும் 10,46,163. இதன் மூலம் நிலுவையில் உள்ள கிளைம் தொகைகள் முறையே ரூ.52,713 கோடி, ரூ.61,051 கோடி, ரூ.70,722 கோடி, ரூ.74,718 கோடி, ரூ.80,455 கோடி என அதிகரித்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கறிஞர் ஜெயின் கூறுகையில், ‘‘இவ்வாறு நத்தை வேகத்தில் கிளைம்கள் நிவர்த்தி செய்யப்படுவதால் இன்சூரன்ஸ் தொகையை பெற சராசரியாக 4 ஆண்டுகள் ஆகிறது’’ என்றார்.

 

The post ரூ.80,455 கோடி மதிப்பிலான 10.46 லட்சம் வாகன விபத்து காப்பீடு கிளைம்கள் நிலுவை: ஆர்டிஐ மனுவில் தகவல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...