×

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பதவி காலம் ஜூன் வரை நீட்டிப்பு

புதுடெல்லி: இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் பதவி காலம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மனோஜ் பாண்டே கடந்த, 2022 ஏப்ரல் மாதம் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்த மாதத்துடன் அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது.

இந்நிலையில், ஒன்றிய அமைச்சரவையின் நியமன குழு மனோஜ் பாண்டேவின் பதவி பதவிக்காலத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு, அதாவது 2024, ஜூன் 30 வரை, நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இவர் கடந்த 1982 ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். தலைமை தளபதி பொறுப்பேற்பதற்கு முன்பு ராணுவத்தின் துணைத் தளபதியாக பதவி வகித்துள்ளார்.

 

The post ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பதவி காலம் ஜூன் வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED மேற்கு வங்கம் ரயில் விபத்து நேரிட்ட...