×

பூதிபடகாவில் யானைகள் முகாம் அமைக்கப்படும்: மாவட்ட வனத்துறை அதிகாரி தகவல்

சாம்ராஜ்நகர்: வனப்பகுதிகளில் புலி, காட்டு யானைகளை பிடிக்க கும்கி யானைகளை பயன்படுத்த வசதியாகவும், சுற்றுலா பயணிகளை கவரும் விதத்திலும் பூதிபடகாவில் யானைகள் முகாம் அமைக்கப்படும் என்று மாவட்ட வனத்துறை அதிகாரி மனோஜ்குமார் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட வனத்துறை அதிகாரி மனோஜ்குமார் கூறுகையில், கொள்ளேகால் தாலுகா பூதிபடகா வனப்பகுதியில் புதிய யானைகள் முகாம் அமைக்கப்படுகிறது. வனப்பகுதிகளில் இருந்து கிராமத்திற்குள் புகும் புலி மற்றும் காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகளை பயன்படுத்தப்படுகிறது. இந்த யானைகள் தற்போது வேறு மாவட்டத்திலிருந்து அழைத்து வரப்படுகிறது. இதனால் பூதிபடகாவில் புகழ்பெற்ற கஜேந்திரா யானைகள் உள்பட 6 யானைகள் பராமரிக்கப்பட்டு கும்கி யானைகளாக பயன்படுத்தப்படும். அத்துடன் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கவும் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்படும். இந்த பகுதியில் யானை பாகன்கள், யானை பராமரிப்பாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படும்’’ என்றார்….

The post பூதிபடகாவில் யானைகள் முகாம் அமைக்கப்படும்: மாவட்ட வனத்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Budipataga ,District forest department ,Samrajnagar ,Elephants ,Camp ,Bhodipataka ,
× RELATED வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை...