×

ஜெயலலிதாவுக்கு மூளைச்சாவு எப்போது ஏற்பட்டது? டாக்டரின் குழப்பமான வாக்குமூலம் , நீதிபதி டென்ஷன் ஆனதால் பரபரப்பு

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் 2016 டிச.4ம் தேதி கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்ட பிறகு ஜெயலலிதாவுக்கு மூளைச்சாவு எப்போது ஏற்பட்டது என்பது குறித்து டாக்டர் அளித்த வாக்குமூலத்தால் நீதிபதி டென்ஷன் ஆனார். இதனால் ஆணைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தில் நேற்று காலை 11 மணியளவில் தோல் நோய் சிகிச்சை சிறப்பு டாக்டர் ரவிச்சந்திரன், நரம்பியல் சிகிச்சை சிறப்பு நிபுணர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார்கள் அவர்களிடம் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

அப்போது கார்டியாக் அரெஸ்ட் வந்த பிறகு மூளைச்சாவு ஏற்பட்டதை எப்படி உறுதி செய்வீர்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஆணைய நீதிபதி ஆறுமுகச்சாமி எழுப்பினார். அதற்கு, டாக்டர் முறையான பதில் அளிக்கவில்ைல. இதனால் டென்ஷனான நீதிபதி, ‘நீங்கள் அளிக்கும் பதில்கள் திருப்தி அளிக்கவில்ைல. பிரச்னையை திசை திருப்பவே தவறான தகவல்களை அளிக்கிறீர்கள் என்று கூறினார். அப்போது டாக்டர் மவுனமாக இருந்தார். தொடர்ந்து சசிகலா தரப்பு, அப்போலோ தரப்பினர் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து சில கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு டாக்டர்கள் உரிய பதில் அளித்தனர்.

இது குறித்து விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறும் போது, தோல் நோய் சிகிச்சை சிறப்பு டாக்டர் ரவிச்சந்திரன் நரம்பியல் சிகிச்சை நிபுனர் மீனாட்சி சுந்தரம் இரண்டு பேரும் ஆஜராயினர். இதில், டாக்டர் ரவிச்சந்திரன், கடந்த 2016 ஜூன் முதல் வாரத்தில் போயஸ்கார்டனில் ஜெயலலிதாவை பரிசோதனை செய்துள்ளார். அந்த சமயத்தில் டாக்டர் சிவக்குமார், பெண் டாக்டர் ஒருவரை பரிந்துரை செய்து தருமாறு கேட்டுள்ளார். அதன்படி தான் ரவிச்சந்திரன் பெண் டாக்டர் பார்வதி பத்மநாபனை பரிந்துரைத்துள்ளார். அவர் தான் சரும பிரச்னைக்கு சிகிச்சை கொடுத்துள்ளார். ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்து 6 நாட்கள் கொடுத்தார்.

அதன் பிறகு ஜூன் 30ம் தேதி ஜெயலலிதாவின் சரும பிரச்னை சரியானதா என்பதை பரிசோதிக்க டாக்டர் ரவிச்சந்திரன் சென்றார். அப்போது, ஜெயலலிதாவுக்கு சரும பிரச்னைக்கு ஓரளவு சரியாகி இருந்ததாக டாக்டர் கூறினார். நரம்பியல் சிகிச்சை நிபுணர் மீனாட்சி சுந்தரம் கடந்த 2016ல் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரே ஒரு முறை ஜெயலலிதா பரிசோதனைக்காக வரும்போது, உடன் இருந்தேன் என்று மட்டுமே கூறியுள்ளார். அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை எதுவும் தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நரம்பியல் சிகிச்சை நிபுணர் தான் மூளைச்சாவு அடைந்தது என்பதை அறிவிப்பார். எனவே, அவரிடம் நீதிபதி, மூளைச்சாவை எப்படி உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டார்.

அப்போது, டாக்டர் மீனாட்சி சுந்தரம், கார்டியாக் அரெஸ்ட் வந்த பிறகு மூளைச்சாவை 24 மணி நேரம் முதல் 40 மணி நேரம் கழித்து தான் மூளைச்சாவு என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கு ஒருமுறை வேறுவேறு டாக்டர்கள் வந்து பார்க்க வேண்டும். அதன்பிறகு மூளைச்சாவு ஏற்பட்டது என்பதை அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் கூறினார்.
இதயம் செயல் இழந்த பிறகும், உடல் உறுப்புகள் ரத்தம் ஓட்டம் அனுப்பப்பட்டு, மூளை செயல்பாட்டில் உள்ளது என்று கூறுவதற்காகவே பல மணி நேரம் எக்கோ கருவி பொருத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக இன்னும் பல டாக்டர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : brainchild ,Jayalalithaa Doctor ,Judge , Jayalalitha, Bureau of Judge, Judge Tensionhan
× RELATED கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக...