கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே மாதிரவேளுரில் 20 வருடங்களுக்கு பிறகு தூக்கணாங்குருவி பனை மரத்தில் கூடுகட்டி வசிப்பதை அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கீரங்குடி, பாலுரான்படுகை, வாடி, பூங்குடி, குன்னம், பெரம்பூர் ஆகிய கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் தூக்கணாங் குருவிகள் பனை மரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன் கூடுகட்டி வசித்து வந்தன. பனை மரங்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்தன. ஆற்றின் கரையோர கிராமங்கள் இயற்கை எழில் பிரகாசிக்கும் இடமாகவும் இருந்து வந்தது.
நீர் நிலைகள் நிரம்பியுள்ள இடத்திலும் நல்ல ஆரோக்கியமுள்ள சுகாதாரமான இடம் மட்டுமே தூக்கணாங்குருவி வசிப்பதற்கு ஏற்ற இடமாகவும் அத்தைகைய இடங்களை மட்டுமே தூக்கணாங்குருவி தேர்ந்தெடுத்து வாழும். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் வயல் வெளிகளில் தண்ணீர் இன்றி வறண்டு போனதால் தூக்கானாங் குருவிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.
நூற்றுக்கணக்கான பனை மரங்களும் அழிந்து விட்டன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி உள்ள கிராம பகுதிகளுக்கு தண்ணீர் வர ஆரம்பித்து தூக்கணாங் குருவிகளும் வரத்தொடங்கி மாதிரவேளுர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு பனைமரத்தில் நூற்றுக்கண்க்கான கூடுகளை கட்டி வசிக்க தொடங்கியுள்ளன. அந்த வழியே செல்பவர்கள் குருவிகளின் கீச் கீச் என்ற சப்தத்துடன் சுறுசுறுப்பாக ஓடி வருவதை அதிசயமாக பார்த்து ரசித்து வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
