லண்டன்: பாப் இசை மன்னர் மைக்கேல் ஜாக்சனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு லண்டனில் அவரது திரளான ரசிகர்கள் ஒன்றுகூடி தற்காலிகமாக அமைக்கப்பட்ட அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். லண்டனின் தேம்ஸ் நதிக்கரையில் மைக்கேல் ஜாக்சன் பெயர் பொறிக்கப்பட்ட தற்காலிக கிரீட வடிவ சிலையை சோனி நிறுவனம் வடிவமைத்திருந்தது. இந்த சிலையின் முன் குவிந்த ரசிகர்கள் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது நடன அசைவுகளை ஆடி ஆர்ப்பரித்தனர். இந்த கிரீட சிலை அவரது பிறந்தநாளில் தேம்ஸ் நதிக்கரையில் வைக்கப்பட்டு பின்னர் அகற்றப்பட்டது.
மைக்கேல் ஜாக்சனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஜப்பான், ஸ்பெயின், மாஸ்கோ போன்ற நாடுகளில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று திரண்டு மைக்கேல் ஜாக்சனின் பாப் பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். இதில் பெரும்பாலானோர் அவரின் பிரபலமான நடன அசைவான மூன் வாக் செய்து அசத்தினர். பாப் இசை மற்றும் தன்னுடைய தனித்துவமான நடன அசைவுகளால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர் மைக்கேல் ஜாக்சன்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
