×

வெண்பனி போர்த்திய பச்சை புல்வெளிகள் ‘மைனஸ்’ குளிரில் நடுங்கும் மூணாறு: உறைபனியால் சுற்றுலாப்பயணிகள் உதறல்

மூணாறு: மூணாறில் தட்பவெப்ப நிலை மைனஸ் டிகிரிக்கு இறங்கியதால், பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. புல்வெளிகளெல்லாம் உறைபனி போர்த்தி, நகரமே அடர் குளிர்நிலைக்கு மாறியுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, தென்னகத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. பல்ேவறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் மூணாறில் கடுமையான குளிர் நிலவும். இந்த ஆண்டு வழக்கத்தை விடவும் கடுமையான குளிரும், உறைபனியும் நிலவுகிறது. குளிர், உறைபனி சீசனை அனுபவிக்க இங்கு வரும் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. பொதுவாக டிசம்பர் மாத இறுதி, ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து தான் அதிகமான குளிர் மூணாறில் இருப்பது வழக்கம். மூணாறில் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கும். இதில், டிசம்பர் இறுதி முதல் ஜனவரி 15 வரை மைனஸ் டிகிரி செல்சியஸ் ஆக மாறி, பனிப்பொழிவு இருக்கும். கடந்தாண்டின் இறுதிநாளான நேற்றுமுன்தினம் மூணாறில் உறைபனி மைனஸ் டிகிரி செல்சியஸை எட்டியது. இந்த காலநிலை மாற்றம் சுற்றுலாப்பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலர் மைனஸ் டிகிரி குளிரை தாங்க முடியாமல் திண்டாடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மூணாறு, தேவிகுளம், லக்காடு எஸ்டேட், குண்டுமலை, தென்மலை, லட்சுமி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சைலண்ட் வேலி, நல்லதண்ணி எஸ்டேட் பகுதிகளிலும் குளிர் மைனஸ் டிகிரியாக இருந்தது. இங்கு குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு டிகிரியாக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை மாட்டுப்பட்டியில் 3 டிகிரியாக இருந்தது. வரும் நாட்களில் மேலும் பனிப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொங்கல் உள்ளிட்ட பண்டிகை கால விடுமுறையை கொண்டாட மூணாறுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மூணாறில் உள்ள சுற்றுலா விடுதிகளில் இப்போதே முன்பதிவு ஏறக்குறைய முடிந்து விட்டது. இதனால், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள மூணாறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ெகாடைக்கானல் ‘என்ஜாய்’கொடைக்கானல்: மலைகளின் இளவரசி கொடைக்கானலில் பகலில் இதமான குளிரும், இரவில் நடுங்க வைக்கும் குளிரும் நிலவுகிறது. இந்த சூழலை அனுபவிக்க கடந்த ஒரு வாரமாகவே சுற்றுலாப் பயணிகளின் அதிகளவில் குவிந்துள்ளனர். நேற்று வார விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதனால் தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் ஹவுஸ்புல் ஆனது. சில சுற்றுலாப் பயணிகள் தங்க இடமின்றி பரிதவித்தனர். முக்கிய சுற்றுலா இடங்களில் கடும் வாகன நெருக்கடி நிலவியது. பிரையண்ட் பூங்கா, ேகாக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட் பகுதிகளை சுற்றிப்பார்த்த பயணிகள், உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நட்சத்திர ஏரியில் ஆனந்த படகு சவாரி செய்தனர். புத்தாண்டுக்கு பிறகு பள்ளிகள் துவங்குவதால் கொடைக்கானலில் இனி சுற்றுலாப் பயணிகள் வருகை குறையும் என்றும், பொங்கல் விடுமுறைக்கு மீண்டும் களைகட்டும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்….

The post வெண்பனி போர்த்திய பச்சை புல்வெளிகள் ‘மைனஸ்’ குளிரில் நடுங்கும் மூணாறு: உறைபனியால் சுற்றுலாப்பயணிகள் உதறல் appeared first on Dinakaran.

Tags : Venbany ,Moonaru ,
× RELATED மூணாறில் நிற்காமல் கொட்டுது கனமழை...