×

பாலிகுட்டா வனப்பகுதியில் ஏற்படும் காட்டு தீயை கட்டுப்படுத்த வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சாம்ராஜ்நகர்: பாலிகுட்டா வனப்பகுதியில் ஏற்படும் காட்டு தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக சமுக ஆர்வலர்கள் கூறியதாவது:“சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா பாலிகுட்டா வனப்பகுதிக்குள் அடிக்கடி காட்டு தீ ஏற்பட்டு விலை உயர்ந்த மரங்கள், அபூர்வ வகையான மூலிகை செடிகள் எரிந்து நாசமாகி வருகிறது. அதே போல் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணமான நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்துடன் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதிக்குள் தீ ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து காட்டு தீ ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ரமேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:வனப்பகுதியில் ஏற்படும் காட்டு தீயை கட்டுப்படுத்த ஏற்கனவே வனபாதுகாப்பு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டு தீ பரவலை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இத்துடன் வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழையும் நபர்களை கண்டறிய சில பகுதிகளில் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மர்ம நபர்கள் வனப்பகுதிக்குள் நுழைவதை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.  வனப்பகுதியில் ஏற்படும் காட்டு தீயை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றால் பொதுமக்களின் ஓத்துழைப்பு முக்கியமாகவுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் தீ ஏற்படுவது குறித்து தெரிய வந்தால் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் தீ பரவலை கட்டுப்படுத்த முடியும்’’ என்றார். …

The post பாலிகுட்டா வனப்பகுதியில் ஏற்படும் காட்டு தீயை கட்டுப்படுத்த வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ballygutta forest ,Samrajnagar ,Dinakaran ,
× RELATED சாம்ராஜ்நகர் மறுவாக்குப்பதிவு வெறும் 71 பேர் மட்டுமே ஓட்டு