×

சல்மான் கானின் மான் வேட்டை திரைப்படமாகிறது

மும்பை: 1998ல்‘ஹம் சாத் சாத் ஹெயின்’ படப்பிடிப்பின் போது 2 அறியவகை மான்களை் வேட்டையாடிய குற்றத்திற்காக நடிகர் சல்மான் கான் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த சைஃப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு இன்று வரை வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய இச்சம்பவத்தின் பின்னணியில் ‘காலா ஹிரன்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர் அமித் ஜானி கூறூகையில், ‘யாருக்கும் ஆதரவாகவோ, அல்லது புண்படுத்தும் நோக்கத்திலோ இப்படம் எடுக்கப்படவில்லை.

இது பல வருடங்களாக ஊடகங்களில் பேசப்பட்டு வரும் வரலாற்று சிறப்புமிக்க வழக்கின் உண்மையான பக்கங்களை, மக்களுக்கு காட்டும் முயற்சி மட்டுமே’ என்றார். இந்த வேட்டை விவகாரத்தால் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இப்படம் குறித்த அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Tags : SALMAN KHAN ,Mumbai ,Saif Ali Khan ,Tabu ,Neelam ,Sonali Bindra ,
× RELATED ஜூலை 3ல் வெளியாகிறது கட்டா குஸ்தி 2