×

சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் சோபிதா

சென்னை: தமிழில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சோபிதா துலிபாலா.
ஆர்யா, வி.ஆர்.தினேஷ் உள்பட பலர் நடிக்கும் இப்படம் குறித்து சோபிதா துலிபாலா பேசுகையில், ‘ஒரு வழக்கமான கேங்ஸ்டர் படமாக ‘வேட்டுவம்’ இருக்காது.

எனது சினிமா பயணத்திலேயே நான் கொடுத்திருக்கும் மிகச்சிறந்த நடிப்பு இந்த படத்திற்காக தான். இது ஒரு அபோகலிப்டிக் படமாக, ஒரு மாறுபட்ட பின்னணியில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்து உருவாகிறது. கதை ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல் வெவ்வேறு காலகட்டங்களைக் கடந்து செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Chennai ,Sobitha Dhulipala ,Pa. Ranjith ,Arya ,V.R. Dinesh ,
× RELATED பிரஷர் குறித்து யோசிக்காத ஜான்வி கபூர்