- ரவிமோகன்
- LCU
- சென்னை
- லோகேஷ் கனகராஜ்
- பாக்யராஜ் கண்ணன்
- ராகவா லாரன்ஸ்
- நிவின் பவுலி
- சம்யுக்தா மேனன்
- சாய் அபயங்கர்
- பேஷன் ஸ்டுடியோஸ்
- தி ரூட்
- ஜி அணி
சென்னை: லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய எல்சியுவில் இதுவரை ‘விக்ரம்‘, ‘லியோ’ ஆகிய படங்கள் வெளி வந்துள்ளது. தற்போது எல்சியுவில் ‘பென்ஸ்’ என்ற படம் உருவாகி வருகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். நிவின் பாலி, சம்யுக்தா மேனன் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன் பாக்யராஜ் கண்ணன் அளித்த பேட்டியில், தான் இயக்கி வரும் ‘பென்ஸ்’ படத்தில் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி ஆகியோருடன் இணைந்து மற்றொரு முன்னணி நட்சத்திரமும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அது யார் என்பது குறித்த அறிவிப்பு வராமலே இருந்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது சோஷியல் மீடியாவில் ரவி மோகன் இப்படத்தில் இணைந்துள்ள முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக ரவி மோகன் ‘பென்ஸ்’ படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவி வந்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது.
