×

காட்டாளான் விமர்சனம்…

கேரளாவில் அடர்ந்த வனப்பகுதியையும், அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களையும் தனது அடக்குமுறையால் மிரட்டி வைத்திருக்கிறார், யானை தந்தங்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தும் தாதா சுனில். போலீசால் பறிக்கப்பட்ட தந்தங்களை மீட்க ஆண்டனி வர்கீஸை அனுப்புகிறார். திடீரென சுனிலுக்கு வில்லனாக மாறும் ஆண்டனி வர்கீஸ், பழங்குடியின மக்களுக்கு என்ன செய்தார் என்பது மீதி கதை.

ஆண்டனி வர்கீஸ், ஆக்‌ஷன் காட்சிகளில் எதிரிகளை பொளந்து கட்டுகிறார். வில்லன்கள் சுனில், கபீர் துஹான் சிங் ஆகியோர் வழக்கமான பாடிலாங்குவேஜில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். கிளைமாக்சில் மட்டும் வரும் துஷாரா விஜயன், ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ராஜ் திரன்தாசு, ஹரிசங்கர் நாராயணன், சந்தீப் ரவிராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சிறப்பு தோற்றத்தில் இயக்குனர்கள் அல்போன்ஸ் புத்திரன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தோற்றத்திலும், நடிப்பிலும் அசத்தியுள்ளனர். அடர்ந்த காடுகள், பிரமிப்பூட்டும் யானைகள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவாளர்கள் ரெனடிவ், சந்துரு செல்வராஜ், சுதீப் இளமன் ஆகியோர் தனி முத்திரை பதித்துள்ளனர். ரவி பஸ்ரூர் பின்னணி இசை, சில நேரங்களில் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது.

சமீர் முஹம்மதுவின் எடிட்டிங், கதையின் வேகத்தை அதிகரித்துள்ளது. பவுல் ஜார்ஜ், ஜோபி வர்கீஸ், ஜெரோ ஜேக்கப் ஆகியோரின் கதை, திரைக்கதை மற்றும் உன்னி.ஆர் வசனம் குறிப்பிடத்தக்கவை. பவுல் ஜார்ஜ் இயக்கியுள்ளார். கதையை நம்பாமல், ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே நம்பியிருக்கிறார். ஒருகட்டத்தில் ஆக்‌ஷன் மட்டுமே பெரிதாக தெரிகிறது.

Tags : Dada Sunil ,Kerala ,Antony Varghese ,Sunil ,Kabir Duhan Singh ,
× RELATED பிரஷர் குறித்து யோசிக்காத ஜான்வி கபூர்