சென்னை: ‘காந்தி கண்ணாடி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கேபிஒய் பாலா. அதனை தொடர்ந்து உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘ரீமேட்ச்’ என்ற படத்தில் பேட்மிண்டன் விளையாட்டு வீரராக நடிக்கிறார். தானு ஹர்ஷா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். ஸினிமா மீடியா எண்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில்ன தினேஷ்ராஜ், பிரகாஷ் சேஷாத்ரி, ஜி. ரவி குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் பாலா பேசும்போது, ‘எனது முதல் படத்துக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.
ராதா மோகன் உதவியாளர் விமல் குமார் என்பவர் ‘ரீமேட்ச்’ படத்தை இயக்குகிறார். தனு ஹீரோயினாக நடிக்கிறார். பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியில் நடக்கிறது. சில மாதங்களாக இந்த கதைக்காக பேட்மிண்டன் பயிற்சி எடுத்து வருகிறேன். சந்தோஷ் பிரதாப், இளவரசு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக்குடன் பல படங்களில் நடித்த செல் முருகனும் இதில் இருக்கிறார். அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார். இந்த பட பூஜைக்கு வந்த இயக்குனர்கள் சசி, ராதா மோகன் ஆகியோருக்கு நன்றி’ என்றார்.
