- திருப்பதி
- ஐஸ்வர்யா ராஜேஷ்
- சென்னை
- பி. ஜகதீஷ்
- எஸ்.ஆர். புரொடக்ஷன்ஸ்
- வெற்றிமாறன்
- கார்த்திக் பெருமாள்சாமி
- கிச்சா சுதீப்
- விக்ராந்த்
- கிஷோர்
- சேதன்
- ஆர் வேல்ராஜ்
- சாம் சிஎஸ்
- சரத் குமார்
- ராதிகா
- தியாகராஜன்
- பிரசாந்த்
- நேர்த்தியான
- ஸ்ரீப்ரியா
- நட்சத்திர
- எஸ்.கதிரேசன்
- எஸ்.ஆர். பிரபாகரன்
- சுப்பிரமணியம் சிவா
- ஆர் கே. சுரேஷ்
- தங்கதுரை
- ஆதவ் கண்ணதாசன்
- பிருத்வி பாண்டிராஜன்
சென்னை: ‘மெட்ராஸ்காரன்’ என்ற படத்தை தொடர்ந்து எஸ்.ஆர்.புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜெகதீஷ் தயாரிக்க, வெற்றிமாறன் உதவியாளர் கார்த்திக் பெருமாள்சாமி எழுதி இயக்கும் படம், ‘அண்டர் 18’. கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர், சேத்தன் நடிக்கின்றனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா பூஜையில் சரத்குமார், ராதிகா, தியாகராஜன், பிரசாந்த், நட்டி, ஸ்ரீபிரியா, பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன், எஸ்.ஆர்.பிரபாகரன், சுப்பிரமணியம் சிவா, ஆர்.கே.சுரேஷ், தங்கதுரை, ஆதவ் கண்ணதாசன், பிருத்வி பாண்டியராஜன், இளங்கோ கிருஷ்ணன் கலந்துகொண்டனர். படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், ‘ஒரு உண்மை சம்பவம் படமாகிறது.
ஒன்றரை வருடத்துக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறேன். தயாரிப்பாளர் வெற்றிபெற்றால் திரைத்துறையும், நாங்களும் வளமாக இருப்போம். இதன் தயாரிப்பாளருக்கு திருப்பதி உண்டியல் மாதிரி பணம் குவியும்’ என்றார். விக்ராந்த் கூறும்போது, ‘ஓசூர் பகுதியில் கதை நடக்கிறது. வழக்கறிஞராக கிச்சா சுதீப் நடிக்கிறார். நான் கேட்டதற்காக நடிக்கும் அவருக்கு நன்றி. பி.டி மாஸ்டராக நான் நடிக்கிறேன்’ என்றார்.

