×

உத்தவ் தாக்கரேவை அடிப்பதாக கூறிய ஒன்றிய அமைச்சர் ரானே அதிரடி கைது: நாசிக் போலீசார் நடவடிக்கை

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கன்னத்தில்  அறைந்திருப்பேன் என்று கூறிய ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே, மாநில போலீசால் அதிரடியாக  கைது  செய்யப்பட்டுள்ளார்.  மகாராஷ்டிராவில் இருந்து சமீபத்தில் ஒன்றிய அமைச்சராக, பாஜ.வை சேர்ந்த நாராயண் ரானே நியமிக்கப்பட்டார். இவர் நேற்று முன்தினம்  மகாராஷ்டிராவின் ராய்கட்டில் நடந்த, ‘மக்கள் ஆசி யாத்திரை’யின் போது `சுதந்திர  தினத்தன்று உரை நிகழத்திய மகாராஷ்டிரா முதல்வர்  உத்தவ் தாக்கரே, ‘இது எத்தனையாவது  சுதந்திர தினம்?’ என்று அருகில் இருந்த உதவியாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டு, ‘75வது ஆண்டு சுதந்திர தினம்’ என்று கூறியுள்ளார். ஒரு முதல்வருக்கு  எத்தனையாவது சுதந்திர தினம் என்பது தெரியாதது வெட்கக்கேடானது. அந்த  இடத்தில் நான் இருந்திருந்தால் உத்தவ் தாக்கரேயின் கன்னத்தில  அறைந்திருப்பேன்,’ என்று தெரிவித்தார். ரானேயின்  பேச்சை எதிர்த்து, மாநிலம் முழுவதும் போலீசில் சிவசேனா நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதனை  தொடர்ந்து போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் நாராயண் ரானே மீது  வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், தன்னை கைது செய்யக் கூடாது  என உத்தரவிட கோரியும் மும்பை .உயர் நீதிமன்றத்தில் ரானே மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.  இந்நிலையில், நாசிக் போலீசார் நேற்று காலை ரத்னகிரி சென்று,  சிப்லும் பகுதியில் மக்கள் ஆசி  யாத்திரையில் பங்கேற்றிருந்த ரானேவை கைது செய்தனர். பின்னர், அவர்  ரத்னகிரியில் உள்ள சங்கமேஷ்வர்  போலீஸ் நிலையத்துக்கு கொண்டு  செல்லப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார்.சிவசேனா-பாஜ மோதல்  நாராயண் ரானேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம்  சிவசேனாவினர்  கல்வீசியும், தீவைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில்  சிவசேனாவினருக்கும் பா.ஜ.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மும்பை  ஜூகுவில் உள்ள  நாராயண் ரானேயின் வீடு முன் ஏராளமான  சிவசேனா இளைஞர்  அணியின் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜ.வினரும் அங்கு கூடி ரானேவுக்கு ஆதரவாக கோஷம் போட்டனர். இரு  தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். போலீசார்  தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ரத்தனகிரி மாவட்டம் சிப்லுமிலும் ரானேயின் வீடு உள்ளது. அங்கும் பாஜ.வினரும் சிவசேனாவினரும் மோதலில்  ஈடுபட்டனர்….

The post உத்தவ் தாக்கரேவை அடிப்பதாக கூறிய ஒன்றிய அமைச்சர் ரானே அதிரடி கைது: நாசிக் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Union ,Udhav Thackeray ,Mumbai ,Union Minister ,Narayan Rane ,Maharashtra ,Chief Minister ,Uttav Thackeray ,Nashik ,
× RELATED அதிகரித்து வரும் வெப்பநிலை தீ தடுப்பு,...