கொடைக்கானல்: கொடைக்கானலில் சேதமடைந்து வரும் ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்குகைகளை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆதிமனிதர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கு சான்றாக இவர்கள் வாழ்ந்த கற்களால் அமைக்கப்பட்ட குகைகள் அடுக்கம், பெருமாள்மலை, தாண்டிக்குடி, பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. சில இடங்களில் இந்த கற்குகைகள் சிதிலம் அடையாமல் உள்ளன. ஆனால் சில இடங்களில் கற்குகைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தாண்டிக்குடி, பாச்சலூரில் உள்ள கற்குகைகள் சிதிலமடைந்து சேதமாகி வருகிறது. இவற்றை பராமரித்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதுடன், தொல்லியல் துறையினர் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
The post கொடைக்கானலில் அழிந்து வரும் ஆதிமனிதர் கற்குகைகள்: பாதுகாக்க கோரிக்கை appeared first on Dinakaran.
