×

நோராவின் ஆபாச பாடல் யூடியூபிலிருந்து நீக்கம்

மும்பை, மார்ச் 20: துருவா சார்ஜா, ஷில்பா ஷெட்டி நடித்துள்ள படம் கேடி தி டெவில். கன்னட சினிமாவில் உருவாகியுள்ள இந்த படம் பான் இந்தியா மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் இடம்பெற்ற ஒரு பாடலில் சஞ்சய் தத்துடன் நோரா ஃபதேகி நடனமாடியுள்ளார். இந்த பாடல் காட்சி ஆபாசமாக படமாக்கப்பட்டுள்ளதாகவும் பாடலில் இரட்டை அர்த்த வரிகள் பயன்படுத்தியுள்ளதாகவும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம், ஒன்றிய அரசுக்கும் சென்சார் போர்டுக்கும் இது பற்றி விசாரிக்க நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் வினித் ஜிண்டால், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் மற்றும் தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றிடம் புகார் அளித்தார். இந்த முறையீட்டை அடுத்து, பாடலுக்கான எதிர்ப்பு மேலும் தீவிரமடைந்தது. ‘‘இப்பாடல் மிகவும் ஆபாசமானது, பாலியல் தூண்டுதல் கொண்டது, அருவருக்கத்தக்க வெளிப்பாடுகளைக் கொண்டது’’ என ஜிண்டால் கண்டனம் செய்தார்.

இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். சமூக வலைத்தளங்களில் இதன் பரவல் குறித்தும் ஜிண்டால் அதிருப்தி தெரிவித்தார். பாடலாசிரியர் ரகீப் ஆலம், இயக்குநர் பிரேம், இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா, பாடகி மங்ளி ஆகியோரின் பெயர்கள் புகாரில் இடம்பெற்றன. இப்பாடல் குறித்து டெல்லி காவல்துறை சைபர் பிரிவில் தனி குற்றவியல் புகார் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாடல் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

Tags : Nora ,YouTube ,MUMBAI ,DURUA CHARJA ,SHILPA SHETTY ,Nora Fatehi ,Sanjay ,National Commission for Women ,Union Government ,Sensor Board ,
× RELATED சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி