×

வணக்கம் பண்ணையார் இசை வெளியீடு

சென்னை: சாயக் மீடியா புரொடக்‌ஷன் வழங்கும் ‘வணக்கம் பண்ணையார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த திரைப்படம் சித்தார்த் அபிமன்யு தயாரிப்பில் உருவாகியுள்ளது. கரு துரைராஜன் இயக்கி, இசையும் அமைத்துள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் காதல் சுகுமார், கிரேன் மனோகர், ரஞ்சன், அஸ்வினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ராஜசேகர் நாயுடு கவனித்துள்ளார்.
படத்தொகுப்பை கார்த்தி பாண்டியன் செய்துள்ளார். விழாவில் நடிகர் ஆனந்த் பாபு, சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே. அன்புச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Chennai ,Sayak Media Production ,Siddharth Abhimanyu ,Karu Durairajan ,Kadhal Sukumar ,Crane Manohar ,Ranjan ,Ashwini ,Rajasekhar Naidu ,Karthi Pandian ,Anand Babu ,Small Investment Producers Council ,President ,R.K. Anbuchelvan ,
× RELATED சூப்பர் ஹீரோயினாக நடிக்கும் அதா சர்மா