×

டாக்டர் பட்டத்தை பயன்படுத்தாத ஸ்ரீலீலா

கடந்த 2023 ஏப்ரலில் தொடங்கிய ‘உஸ்தாத் பகத் சிங்’ என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு, சில பிரச்னைகளால் தடைபட்டு, பிறகு 2025ல் நிறைவடைந்தது. இதில் நடித்தது குறித்து ஸ்ரீலீலா கூறுகையில், `படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே இருந்தது. அப்போது எனக்கு பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. ஆனால், அனைத்து வாய்ப்புகளையும் மறுத்துவிட்டேன். காரணம், ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் எனது கேரக்டர் மிகவும் வலிமையாக இருந்ததுதான்.

எனது திரைப்பயணத்தில் மிகச்சிறப்பாக எழுதப்பட்ட கேரக்டர் இதுதான். ‘லீலா’ என்ற துடிப்பான பெண்ணாக நடித்திருந்தேன். படப்பிடிப்புக்கு முன்பு எந்த ஒரு வசனத்தையும் இயக்குனர் ஹரிஷ் சங்கர் என்னிடம் கொடுக்கவில்லை. ஷூட்டிங்கில் அன்றன்று தரப்படும் வசனத்தை படித்துவிட்டு, பிறகு அதற்கேற்ற பாவனைகளுடன் நடித்தேன். இது எனக்கு புதிய மற்றும் சுதந்திரமான அனுபவத்தை தந்தது. ராசி கன்னாவுடன் எனக்கு காட்சிகள் இல்லை என்றாலும், அவர் மிகவும் அன்பானவர். எனது நடிப்பு பணிகளுக்கு இடையே படிப்பிலும் அதிக கவனம் செலுத்தினேன். 2020ல் தொடங்கிய எனது மருத்துவ படிப்பை 2026ன் தொடக்கத்தில் வெற்றிகரமாக முடித்தேன்.

படப்பிடிப்புக்கு இடையிடையே மருத்துவ படிப்பை தொடர்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால், எனது தேர்வுகளுக்கு ஏற்ப படப்பிடிப்பு தேதிகளை மாற்றியமைத்து எனக்கு அதிக ஒத்துழைப்பு கொடுத்தனர். மருத்துவ பட்டம் பெற்றாலும், எனது சினிமா பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ என்ற பட்டத்தை பயன்படுத்த மாட்டேன். மருத்துவம் என்பது எனது தனிப்பட்ட வாழ்க்கை. சினிமா என்பது எனக்கு தொழில். இரண்டையும் கலக்க நான் விரும்பவில்லை. மேடையிலோ அல்லது திரையிலோ நான் வெறும் ‘ஸ்ரீலீலா’வாகவே அறியப்பட விரும்புகிறேன். வருங்காலத்தில் மருத்துவமனை ஒன்றை நிறுவி, பொதுமக்களுக்கு சேவை செய்யும் திட்டம் இருக்கிறது’ என்றார்.

Tags : Srileela ,Leela ,
× RELATED சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி