
பல்வேறு மொழிகளில் குடும்பப்பாங்காகவும், கிளாமராகவும் நடித்தவர் பூனம் பஜ்வா. திடீரென்று உடல் எடை கூடிய அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, திரையுலகை விட்டு ஒதுங்கிய அவர், தினமும் தனது சோஷியல் மீடியாவில் கிளாமர் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு, தனது ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவரை 41 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் அவர் ரசிகர்களிடம் உரையாடி, பெண்களுடனான உறவுகள் குறித்து சில அறிவுரைகள் வழங்கினார்.
அவர் கூறுகையில், ‘உங்களுடன் பயணித்து வரும் பெண்கள், எந்த தேசத்துக்கும் மகாராணியாக இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், அவர்களை நீங்கள் ராணி மாதிரி கொண்டாட வேண்டும். அவர்களின் அழகு, அன்பு, ஆளுமை போன்றவற்றை மனம் திறந்து பாராட்டுங்கள். ‘சரி, எல்லாவற்றையும் மறந்துவிடலாம்’ என்று சொல்லும் பெண்களிடம் மட்டும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், பெண்கள் அவ்வளவு எளிதில் எதையும் மறப்பது இல்லை.
குறிப்பாக, உங்கள் வாழ்க்கையில் வரும் மற்ற பெண்களை சார்ந்த விஷயங்களை மட்டும் மறக்க மாட்டார்கள். எனவே, பெண்களிடம் உஷாராக இருங்கள். ஜாக்கிரதை’ என்றார். அவர் சொன்ன கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

