
இந்தியில் சல்மான்கான் நடிக்கும் ‘பேட்டில் ஆஃப் கல்வான்’ படம், ஜம்மு காஷ்மீரிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா இடையே நடந்த மோதலை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. இரு நாடுகளிடையே நடந்த மோதல் சம்பவத்துக்கு பிறகு வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகள் முற்றிலும் முடங்கியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்தியா, சீனா இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பெயரை ‘மாத்ருபூமி May War Rest in Peace’ என்று மாற்றியுள்ளனர்.
புதிய தலைப்பை அறிவித்து வெளியிட்டுள்ள போஸ்டரில், ‘போர் அமைதியில் ஓய்வெடுக்கட்டும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது போர் கதையை தாண்டி, மனிதநேயம் மற்றும் அமைதியின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி உருவாகிறது. வரும் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரும் என்று சொல்லப்பட்ட நிலையில், திடீரென்று ஆகஸ்ட் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஹீரோயினாக சித்ரங்கதா சிங் நடித்துள்ளார். சன்னி தியோல் நடிக்கும் ‘லாகூர் 1947’ என்ற இந்தி படம், வரும் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாகிறது.

