- சென்னை
- ரவிமோகன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- கர்நாடக
- முருகன்
- கந்தசாமி
- பாலசுப்பிரமணி
- பாலிவுட்
- கங்கனா ரனாவத்
சென்னை: ரவி மோகன் நடித்த ‘தாம் தூம்’ மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரீ-ரிலீஸ் ஆகிறது. முருகன் பிலிம் பேக்டரி சார்பில் கந்தசாமி மற்றும் பாலசுப்ரமணி இணைந்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இப்படத்தில் ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் உருவான “தாம் தூம்” படம்.
