- பிரசாந்த்
- ஜாய் ஆலுகாஸ் அறக்கட்டளை
- மகிழ்ச்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜாய் அலுகாஸ் குழு
- நிர்வாக இயக்குனர்
- Joyalukas
- தியாகராஜன்
- தேவயானி
- ஐந்து நட்சத்திரம்
- எஸ்.கதிரேசன்
- சரண்
- மைம் கோபி
- எஸ்.கே. சம்பத்
- பாரதி பாஸ்கர்
- சந்தோஷ்
- சார்மி
- நல்லி குப்புசாமி
- கல்யாணமலை மோகன்

தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு புதிதாக கட்டப்பட்ட 50 ஜோய் வீடுகளை ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியது. இதற்கான விழாவில் ஜோய் ஆலுக்காஸ் குழும தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஜோய் ஆலுக்காஸ், தியாகராஜன், தேவயானி, பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன், சரண், மைம் கோபி, எஸ்.கே.சம்பத், பாரதி பாஸ்கர், சந்தோஷ், சார்மி, நல்லி குப்புசாமி, கல்யாணமாலை மோகன் கலந்துகொண்டனர். பயனாளி குடும்பங்களுக்கான வீட்டுச்சாவிகளை பிரசாந்த் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘கல்யாணம் பண்ணி பார்; வீட்டை கட்டி பார் என்று சொல்வார்கள். வீடு, நிலம் இல்லாமல் கஷ்டப்படும் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடுகளை வழங்கியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் வீடு என்பது உரிமை. ‘எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது’ என்று கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் வழிவகுத்துள்ளது. புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களை தேடிச்சென்று மருத்துவ உதவி செய்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றி’ என்றார்.

