×

அந்தோனி: விமர்சனம்

அந்தோனி ஒரு மீனவன். அவன் ஒருநாள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும்போது ஒரு பெண் மிதப்பத்தை பார்க்கிறான். அவளைத் தூக்கிக்கொண்டு கரையேற்றிக் காப்பாற்றுகிறான். யாருமற்ற நளினி, அவனுடன் அடைக்கலமாகிறாள். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அவள் பெயர் நிலா. திடீரென சிறுமி நிலா உயிர்கொல்லி நோயால் இறக்கிறாள். அவளது ஆழ்கடலுக்கு செல்லும் கடைசி ஆசையை நிறைவேற்ற அவளது உடலுடன் நளினியை அழைத்து அந்தோனி செல்கிறான். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் படம்.

படத்தில் அந்தோனியாக நடிகர் கயல் வின்சென்ட் நடித்துள்ளார். பாசத்துக்கு ஏங்கும் ஒரு கதாபாத்திரமாக கவர்கிறார். நாயகியாக நடித்துள்ள டிஜே பானு, ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து சின்ன சின்ன அசைவுகளின் மூலமே பார்ப்பவர் மனங்களை அசைக்கிறார். அந்தோனி மகளாக வான்நிலா பாத்திரத்தில் வரும் சிறுமி ஆஷனா ஒரு துறுதுறு குழந்தையாக சிறப்பாக நடித்திருக்கிறாள். இளையராஜாவின் இசை படத்துக்கு பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் இலங்கையை அழகாக படம் பிடித்துள்ளார். இந்தப் படம் இலங்கையின் போருக்கு பின்னான வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒரு கதையாக உருவாகி இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இருவரும் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றே கூற வேண்டும்.

Tags : Anthony ,Katchatheevu ,Nalini ,Nila ,
× RELATED மும்பை நெடுஞ்சாலையில் காரில்...