×

‘‘நீ Forever” சொல்லும் ஜென் Z சீக்ரெட்ஸ்!

இன்றைய ஜென் Z தலைமுறையின் காதல் உலகத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “நீ Forever” திரைப்படம் வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ழென் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கியுள்ள இப்படம், “தருணம்” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் இணையும் இரண்டாவது முயற்சியாகும்.

நவீன டேட்டிங் ஆப்ஸ் மூலம் தொடங்கும் ஒரு காதல் உறவு மற்றும் அதன் விளைவுகளை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. காதல், நகைச்சுவை கலந்த லவ் டிராமா வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் பெற்ற அர்ச்சனா ரவி நடித்துள்ளார். இவர்களுடன் ஒய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே. ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னையின் பல முக்கிய இடங்களை பின்னணியாகக் கொண்டு இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இப்படத்தின் பாடல்களை சரிகமாநிறுவனம் வெளியிடுகிறது. திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு, டிஜிட்டல் ஒளிபரப்புரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது விளம்பரப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 27 முதல் “நீ Forever” திரைப்படம் ரசிகர்களின் இதயங்களை கவர திரைக்கு வருகிறது.

Tags : Zhen Studios ,Asokumar Kalaivani ,Eden ,
× RELATED இரண்டாவது குழந்தைக்கு தாயான பூர்ணா