- சிவாஜி
- செல்வராகவன்
- டென்னிஸ் மஞ்சுநாத்
- யோகி பாபு
- கோசலைக்கும்
- குஷி ரவி
- ஒய்.ஜி.மகேந்திரன்
- மைம் கோபி
- ரவி வர்மா
- ஏ.கே. பிரியன்
- விஜய சதீஷ்
- ஆர்.எஸ். சதீஷ்
- வ்யோம் என்டர்டெயின்மென்ட்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
யோகி பாபு நடித்த ‘ட்ரிப்’, ‘தூக்குதுரை’ ஆகிய படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத், கிராமத்து பின்னணியில் இயக்கியுள்ள படம், ‘மனிதன் தெய்வமாகலாம்’. இதில் செல்வராகவன், கவுசல்யா, குஷி ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி நடித்துள்ளனர். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்ய, ஏ.கே.பிரியன் இசை அமைத்துள்ளார். அடுத்த மாதம் திரைக்கு வரும் இப்படத்தை வயோம் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் விஜயா சதீஷ், ஆர்.எஸ்.சதீஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.
படம் குறித்து டென்னிஸ் மஞ்சுநாத் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதையுடன் படம் உருவாகியுள்ளது. ஒரு கிராமத்தில், ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்னையில் அரசியல் நுழையும்போது அந்த குடும்பத்துக்கும், கிராமத்துக்கும் என்ன விளைவுகள் ஏற்படுகிறது? அந்த பிரச்னைகளை தீர்க்க ஹீரோ என்ன செய்கிறார் என்பது திரைக்கதை. ஒரு கணவன், மனைவிக்குள் இருக்கும் காதலை பற்றி சொல்லும் படம் இது. தனது கேரக்டருக்காக செல்வராகவன் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். அவர் நுங்கு வியாபாரியாக வருகிறார். அவரது அக்காவாக கவுசல்யா நடித்துள்ளார். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்ற படத்துக்கும், எங்கள் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றார்.
