×

தன்பாலின ஈர்ப்பாளர் வேடத்தில் ராஷ்மிகா

இந்திய திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு முன்னணி ஹீரோ விஜய் தேவரகொண்டா காதல் திருமணம், வரும் 26ம் தேதி ராஜஸ்தானிலுள்ள உதய்பூரில் வெகுவிமரிசையாக நடக்கிறது. வரும் மார்ச் 4ம் தேதி அவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடக்கிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா எடுத்துள்ள தைரியமான முடிவு, இந்திய திரையுலகினரை அதிர வைத்துள்ளது. அதாவது, ‘காக்டெய்ல் 2’ என்ற இந்தி படத்தில் ஷாகித் கபூர், கிரித்தி சனோன் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, தன்பாலின ஈர்ப்பாளராக சர்ச்சைக்குரிய கேரக்டரை ஏற்றுள்ளார். படத்தின் கதைப்படி ராஷ்மிகா மந்தனாவும், கிரித்தி சனோனும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக நடிப்பதாக பாலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை, இதுபோன்ற சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடிப்பது என்பது மிகவும் தைரியமான முடிவு என்றும், இப்படமும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றிபெற்று வசூலை வாரிக்குவிக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். திருமணம் முடிந்த சில மாதங்களுக்குள் இப்படத்தின் ஷூட்டிங்கில் ராஷ்மிகா மந்தனா கலந்துகொள்கிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். முன்னதாக, இப்படத்தில் இருந்து ராஷ்மிகா மந்தனா திடீரென்று விலகிவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், அவரது தரப்பில் இதுவரை பதிலளிக்கவில்லை.

 

Tags : Rashmika ,Rashmika Mandanna ,Vijay Deverakonda ,Udaipur, Rajasthan ,Hyderabad ,Shahid Kapoor ,Kriti Sanon ,
× RELATED சென்சாரில் 45 ‘கட்’ வாங்கிய ‘ஏ படம்’