- ரசிதா
- எம்.எஸ். மூர்த்தி
- மிதிரா பிக்சர்ஸ் பிரைவெட் லிமிடெட்
- சபரி
- ரோஹிந்த்
- ரசிதா மகாலட்சுமி
- ஸ்வேதா
- பவன் கிருஷ்ணா
- K.R விஜயா
- கே.எஸ். வெங்கடேஷ்
- எஸ். சினேகா
- குமாரி கனிஷ்கா
- லேகா
- சிங்கம் புலி
- புஜ்ஜி பாபு
- ஜாவா சுந்தரேசன்
- அம்பானி ஷங்கர்
- முல்லை கோதண்டம்
- பி.எல். தேனப்பன்
- செவிலோ ராஜா
- ஜெயமுருகன்
- மீனாட்சி சுந்தரம்
- ஃபயர் கார்த்திக்
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து நடித்துள்ள படம், ‘99/66’. இதில் சபரி, ரோஹிந்த், ரச்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, லேகா, சிங்கம்புலி, புஜ்ஜி பாபு, ஜாவா சுந்தரேசன், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், பி.எல்.தேனப்பன் நடித்துள்ளனர். சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஜெயமுருகன் அரங்கம் அமைத்துள்ளார்.
மீனாட்சி சுந்தரம் எடிட்டிங் செய்ய, ஃபயர் கார்த்திக் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். ஸ்ரீதர், ஆனந்த் நடனக் காட்சி அமைத்துள்ளனர். சுஜாதா மூர்த்தி இணை தயாரிப்பு செய்துள்ளார். படம் குறித்து எம்.எஸ்.மூர்த்தி கூறுகையில், ‘சென்னையில் 99 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடக்கும் சில அமானுஷ்ய சம்பவங்கள் அங்குள்ளவர்களை அச்சுறுத்துகின்றன. அதன் பின்னணி என்ன என்பது கதை. ஐநூறு புத்த பிக்குகள் நடித்த காட்சிகளை தாய்லாந்து, பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலுள்ள புத்த மடலாயத்தில் விசேஷ அனுமதி பெற்று படமாக்கினேன். AI-CG காட்சிகள் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன’ என்றார்.
